search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் பங்க்"

    • கைதிகள் 30 பேருக்கு வேலை கிடைக்கும்
    • ஜெயில் நிர்வாகம் சார்பில் கைதிகள் நலன் கருதி நடத்தப்படும் பெட்ரோல் பங்க் என்பதால் வாகன ஓட்டிகள் பலர் விரும்பி வந்து பெட்ரோல் பிடிக்கின்றனர்.

    கோவை,

    கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள மத்திய ஜெயிலில் 2100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளுக்கு, வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் டாக்டர் நஞ்சப்பா சாலையில், ஏற்கனவே ஒரு பெட்ரோல் பங்க், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.

    ஜெயில் அங்காடியும் தனியாக நடத்தப்படுகிறது. பெட்ரோல் பங்க்கில் ஜெயில் கைதிகள் 30 பேரும், அலுவலர்கள் 10 பேரும், ஜெயில் அங்காடியில் 4 பேரும் வேலை பார்க்கின்றனர்.

    ஜெயில் நிர்வாகம் சார்பில் கைதிகள் நலன் கருதி நடத்தப்படும் பெட்ரோல் பங்க் என்பதால் வாகன ஓட்டிகள் பலர் விரும்பி வந்து பெட்ரோல் பிடிக்கின்றனர்.

    இதற்கு இருக்கும் வரவேற்பை உணர்ந்த ஜெயில் நிர்வாகம் 2-வது பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் பஸ் நுழையும் இடத்துக்கு அருகே பாரதியார் சலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து, இன்னொரு பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

    மத்திய ஜெயில் கண்காணிப்பாளர் ஊர்மிளா கூறியதாவது:-

    டாக்டர் நஞ்சப்பா சாலை யில் ஜெயில் நிர்வாகம் நடத்தும் பெட்ரோல் பாங்க் தான் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பங்க்குகளின் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது.

    சுத்தமான பெட்ரோல் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால், நாளுக்கு நாள் விற்பனை அதிகரிக்கிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 20 முதல் 22 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. பாரதியார் சாலையில் புதிதாக தொடங்கப்படும் பங்க் மூலம் கைதிகள் 30 பேருக்கும், அலுவலர்கள் 10 பேருக்கும் வேலை கிடைக்கும்.

    இதில் வேலை பார்க்கும் கைதிகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதால், அவர்களும், குடும்பத்தினரும் பயன் பெறுகிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க்கில் பணம் திருடிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் எலியாருபத்தி டோல்கேட் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் மினிவேனில் டீசல் நிரப்ப வந்தனர்.

    திருமங்கலம்

    மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் எலியாருஅ பத்தி டோல்கேட் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் மினிவேனில் டீசல் நிரப்ப வந்த 2 வாலிபர்கள், தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க் அலுவலக மேஜேயில் இருந்த ரூ.40 ஆயிரத்து 400 பணத்தை திருடி சென்று விட்டனர்.

    பெட்ரோல் பங்க்கில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் வாலிபர்கள் பணம் திருடிவிட்டு, தாங்கள் வந்த வாகனத்தில் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இது குறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்று அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.

    அதில் அவர்கள் மதுரை சாமநத்தத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் கார்த்திக்(வயது29), சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் காமாட்சி(30) என்பது தெரியவந்தது.

    அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மினிவேனில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். மற்றொருவரான காமாட்சி அந்த வேனில் டிரைவராக இருந்துள்ளார். இருவரும் சம்பவத்தன்று வியாபாரம் செய்வதற்கு சென்றபோது பெட்ரோல் பங்க்கில் இருந்த ஊழியர் ராஜேஷ் கவனிக்காத நேரத்தில் பணத்தை திருடியது தெரியவந்தது.

    • சென்னையில் உள்ள பல்வேறு பெட்ரோல் பங்க்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை :

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

    அந்தவகையில், சென்னையில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.65 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், சென்னையில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த பெட்ரோல் பங்க்குகளில் 'டீசல் இல்லை' என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

    டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்க்குகளுக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு 'டீசல் இல்லை' என்ற அறிவிப்பு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைவதுடன், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    இதுகுறித்து ஒரு எண்ணெய் நிறுவன அதிகாரி கூறியதாவது:-

    கச்சா எண்ணெய் வரத்து குறைவு, வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் டீசல் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தற்காலிகமானது தான். விரைவில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும்.

    இவ்வாறு அதிகாரி கூறினார்.

    நெல்லையில் பெட்ரோல் நிரப்பும் போது பைக் தீப்பிடித்ததில் படுகாயமடைந்த ஆல்வின் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஆல்வின் என்ற இளைஞர் கடந்த 13-ம் தேதி தன்னுடைய புது பைக்கில் பெட்ரோல் நிரப்ப சென்றிருந்தார். ரூ.1000 க்கு பெட்ரோல் போடும்படி சொல்லிவிட்டு வாகனத்திலியே அமர்ந்திருந்தார்.

    அப்போது ரூ. 900 க்கு டேங்க் நிரம்பி பெட்ரோல் வெளியே சொட்ட ஆரம்பித்தது. இதை கவனித்த பங்க் ஊழியர் அவசர அவசரமாக பம்பை வெளியே எடுத்தார். இந்நிலையில், பம்பில் இருந்த பெட்ரோல் துளிகள் ஆல்வி மற்றும் வண்டியின் மீது பட, ஏற்கனவே சூடாக இருந்த பைக் உடனே பற்றி எரிய ஆரம்பித்தது.

    இந்த தீ விபத்தில் இருசக்கரவாகனம் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. பைக் மீது அமர்ந்திருந்த இளைஞரின் உடலையும் தீ பற்றிக்  கொண்டது. உடனே பங்க் ஊழியர்கள் தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தனர். பைக் ஓட்டிய இளைஞர் ஆல்வின்  தீ காயத்துடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சைக்கு பின்னர் பலனின்றி ஆல்வின் இன்று உயிரிழந்தார். 
    ×